Home செய்திகள் மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும் – தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு

மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும் – தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு

மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கம் என்பவற்றை வலியுறுத்தியும்  தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பினால் பாதிக்கப்பட் டோர் சார்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று (10.04.2021) மட்டக் களப்பில் நடைபெற்றது

திறனாளிகள் காப்பகம்2 மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும் - தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்புமாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தியும், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக் கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஓர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுக் கப்போவதாக மாற்றுத்திறனாளிகள்  தெரிவித்தனர்

இது தொடர்பாக DATA தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்க ளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் DATA அமைப்பின் இயக்குனர் திரு. க. ஜீவராசா, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் அமைப்புகளின் சம்மேளன தலைவர் திரு  து. அரிதாஸ் சம்மேளன ஆலோ சகர் திரு. சோ. புவிராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறி னார்கள் இந்த  சந்திப்பில் திரு.   DATA இயக்குனர் ச.அருள்மொழி அவர்களும் கலந்து கொண்டார்
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளதாவது ……(அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

முழுமையான அறிக்கையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்

(யாழ்.தர்மினி)

Exit mobile version