அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பிரகாரம்,  அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாரும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோரினார்.

சந்தேக நபராக வசந்த கரன்னாகொடவை பெயரிட அனுமதியளித்த நீதிவான்,  அவரை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியொருவர்‍ ஊடாக  மன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.