Tamil News
Home செய்திகள் மாகாண சபை முறைமையை பலவீனப் படுத்துவதே அரசின் திட்டம் – சாணக்கியன் எம்பி குற்றச்சாட்டு

மாகாண சபை முறைமையை பலவீனப் படுத்துவதே அரசின் திட்டம் – சாணக்கியன் எம்பி குற்றச்சாட்டு

மாகாணசபைகளின் அதிகாரத்திலிருந்த மருத்துவமனைகளை அரசு தேசிய மருத்துவ மனைகளாக உள்வாங்கி இருப்பது தொடர்பாக கருத்துக் கேட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண அரசாங்கத்திற்குள் இருக்கின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுப்பதானது மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும். அதற்கான நடவடிக்கை சட்டத்தின்படி  தேசிய கொழும்பு தேசிய வைத்தியசாலை மட்டும்தான் மத்திய அரசுக்குள் வரும் இவ்வாறான மாகாணசபை அதிகாரங்களுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு எடுப்பது மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும். ஏற்கனவே பேரினவாத சக்திகள் பிரயோசனம் இல்லாத மாகாண சபை முறைமை தேவை இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் மாகாண சபையை பலவீனமாகி விட்டு அதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று சொன்னால் ஏற்புடையது அல்ல.

இது அரசாங்கத்தின் இரட்டை வேடம்  அதாவது தமிழர்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைதான்.  அதாவது தமிழ் மக்களின் கையில் இப்போது இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் உரிமை மாகாண சபை முறைமை மட்டும் தான். 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக வந்த மாகாண சபைகளின் மருத்துவ மனைகளைக் கூட மத்திய அரசு சுவீகரிக்க போகுது என்றால் மாகாண சுகாதார அமைச்சில் வைத்தியசாலைகள் இல்லாத சுகாதார அமைச்சு அதை வைத்து என்ன செய்வது மாகாணசபை முறைமைகளை பலவீனப் படுத்துவதற்காக செய்யப்படும்  திட்டமிட்ட ஒரு சதி.

இது தொடர்பாக எங்களுடைய ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நீதிமன்றங்களுக்கு போவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருயனான சந்திப்பு பற்றி கேட்டபோது, இந்திய உயர்ஸ்தானிகர்  கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பானது வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை இந்திய அரசாங்கம் விரைந்து முன்னெடுப்பது தொடர்பாக பேசப்பட்டது  இதில் முன்பு அபிவிருத்தி தொடர்பான பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு கொரோனா  சூழ்நிலையால் டெல்லி கடுமையாக பாதித்த காரணத்தால் அவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இந்தியாவின் நிலைமை மெது மெதுவாக சீராக இருப்பதால் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை வேகமாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் நான் கலந்துகொள்ளவில்லை ஆகவே அதிகமான கருத்துக்கள் சொல்லுவது பொருத்தமற்றது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் சந்திப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது ஆனால் திடீரென அந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டது. தொடர்பாக கேட்டபோது சந்திப்பொன்று நடைபெறுவதாக இருந்தது.

ஜனாதிபதி அவர்களுக்கு திடீரென்ற நேரம் சரிவர பொருந்தாத காரணத்தால் அந்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டது. ஆனால் பிரிதொரு நேரம் ஒதுக்கி இந்த கூட்டம் நடைபெறும் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதிமொழி அளித்து இருக்கின்றார். என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version