மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாது அரசு – ஆளும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன்போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.