Tamil News  
Home செய்திகள் மாகாண அதிகாரங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட கூட்டமைப்பு முடிவு

மாகாண அதிகாரங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட கூட்டமைப்பு முடிவு

மாகாண அரசுக்கு உட்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசு கையேற்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி அமைச்சரவை முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மாகாணங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்தெடுக்கும் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக் காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள நிறுவனங்களைக் கையகப்படுத்தி இந்த மாகாண சபைகளை அதிகாரமற்ற அமைப்புக்களாக மாற்றுவதுடன் மாகாண சபைகளையும் செயலிழக்கச் செய்யும் நோக்கம் அரசுக்கு இருக்கின்றது எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்

Exit mobile version