இலங்கை நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சகல உரிமைகள் , நன்மைகள் உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும் என நுவரெலியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலமாவது மலையக மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இன்று (05) குறித்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டம் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது மலையக மக்களுக்கு தற்போது தேவையான சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் நின்று அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.