மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

153 Views

மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 145 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா கால சுகாதார கட்டுப்பாடுகள் அடிப்படையில், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Tangerang-ல் உள்ள Soekarno-Hatta விமான நிலையத்தை சென்றடைந்த தொழிலாளர்கள் ஜகார்த்தாவில் உள்ள Wisma Atlet கொரோனா அவசர மருத்துவமனைக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply