அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில்  சர்வதேச நிறுவனங்கள்!

மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில்  சர்வதேச நிறுவனங்கள்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில்  சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே,  முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி  இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ”இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து  சில நாட்களுக்குள், அரச மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் மன்னார் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் உள்ளூர் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே  மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version