Tamil News
Home செய்திகள் மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்

மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்

சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மதிக்குமாறு கோரி அமைதியான முறையில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிப்புணர்வு போராட்டம் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  நடைபெற்ற இந்த போராட்டத்தை  மக்கள் அமைதியான முறையில் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியும் உயிருடன் இருக்கின்றபோது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்றபோதும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version