மன்னாரில் இது வரையில் 666 பேர் கொரோனாவால் பாதிப்பு

209 Views

“மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 666 பேர் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வினோதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதில் புத்தாண்டு கொத்தணியோடு அடையாளம் காணப்பட்ட அதிகமானவர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிப்பவர்களாக அல்லது தொழில் செய்பவர்களாக இருக்கின்றர்கள். இவர்கள் 242 பேரும்  நானாட்டான்  மடு  மாந்தை மேற்கு  முசலி பிரதேசங்களை சார்ந்தவர்கள் ஆவார்கள்.  இந்த மாதம் மொத்தமா 3325 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணத்தடை தளர்வு நாட்களில் மீன்பிடி வாடிகள் தொழிற்சாலைகள் போன்ற நெருக்கமான இடங்களில் பணிபுரிபவர்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து உங்களுடைய கடமைகளை செய்யு மாறு வேடப் படுகின்றீர்கள். அதோடு இவர்களுக்கு ஏதேனும் குணங்குறிகள் தென்பட்டால் வீடுகளிலேயே உங்களை நீங்கள் சுய தனிமைப் படுத்திக் கொண்டு பின்னர் சுகாதார துறையினருக்கு அறிவியுங்கள்.

மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற இடைநிலை சிகிச்சை நிலையத்தில் இது வரையில் 400 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 306 பேர் சிகிச்சை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பி இருக்கின்றார்கள்.

இதில் இரண்டாவது கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையமானது நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நறுவிலிக் குளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.  இவை அடுத்த வாரமளவில் நடைமுறைக்கு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது”   என்றார்.

Leave a Reply