மன்னாரில்  அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக  மக்கள் குற்றச்சாட்டு

மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தலைமன்னார் பியர், ஸ்டேஷன், போன்ற இடங்களில் உள்ள வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்

இதன்படி மன்னாரில் சீனி 1கிலோ  118 ரூபாய்  தலைமன்னார் பகுதியில் 120 ரூபாய் தொடக்கம் 140 ரூபாய் வரையில் வைக்கப்படுகின்றது .அரிசி வெள்ளை நாடு 114 ரூபா  தலைமன்னார் பகுதியில் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

அனைத்து மரக்கறி வகைகளும் கால்(1/4) கிலோ 80 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்கப்பட்டு வருகிறது. இதே போல்  மண்ணெண்ணெய் கோதுமை மாவு தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக விற்கப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் இந்த கொரோனா பயணத் தடை காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்து அன்றாடம் உணவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொதுமக்களை மேலும்   துன்பப் படுத்தும் செயலை தலைமன்னார் பகுதி  வியாபாரிகள் செய்து வருகின்றார்கள்

எனவே அதிகாரிகள் மன்னார் நகரத்தை மட்டுமே பார்வையிடாமல் கிராமங்கள் தோறும் நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளை இனங்கண்டு அத்தியாவசிய பொருட்களை நிர்ணயித்த விலையை விட அதிகமான விலையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமன்னார் பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டார்கள்