மனித உரிமை விவகாரம் – சீனாவுக்கு ஆதரவாக இலங்கை

224 Views

சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் நிராகரிப்புக்கு இலங்கை ஆதரவு அளித்துள்ளது.

தற்போது இடம்பெறும் 47 ஆவது கூட்டத்தொடரிலேயே இந்த கோரிக்கை பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, யப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 இற்கு மேற்பட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சீனா அதனை நிராகரித்துள்ளது. சீனாவின் மேற்கு மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கான கல்வி மற்றும் தொழில் பயிற்சி முகாம்களே உள்ளதாக அது தெரிவித்துள்ளது. சீனாவிற்கு ஆதரவாக இலங்கை, பெலாரூஸ், ஈரான், வடகொரியா, ரஸ்யா, சிரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

Leave a Reply