மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில் – ஜயநாத் கொலம்பகே கருத்து

292 Views

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை இலங்கை புதன்கிழமை  சமர்ப்பிக்கும் ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்  மற்றும்   இதுவரை நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply