மனிதர்களின் மனங்களை மாற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு

மனிதர்களின் மனங்களை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் றெட்டிற் என்ற சமூக வலைத்தளத்தின் ஊடாக மாற்றும் நடவடிக்கைகளை சுவிற்சலாந்தின் பல்கலைக்கழகம் ஒன்று மேற் கொண்டு வந்தது தொடர்பில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவி னர் இரகசியமாக இந்த செயல் திட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் மூலம் மனிதர்களின் முடிவுகளையும், எண்ணங்களையும் மாற்றும் செயற்பாடுகளை அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
உலகில் இடம்பெறும் சூடான சம்பவங்கள் தொடர்பி லான விவாதங்களை ஆரம்பித்து மிகப்பெரும் சமூகவலைத் தளங்களின் ஊடாக அதில் கலந்து கொள்ளும் மக்களின் மனங்களில் புதிய தகவல்களை புகுத்தி அவர்களை மாற்றும் செயற்பாடுகளை இந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
பாலியல் பலவந்தத்திற்கு உட்பட்ட ஆண்கள், கறுப்பின மக்கள் தொடர்பான விவாதம், வீடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் போன்ற விவாதங்களை செயற்கையாக உரு வாக்கி அதன் ஊடாக மக்களின் மனங்களில் சில சம்பவங்களை சரியென ஏற்றுக்கொள்ளும் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். சில விவாதங்களில் போலியான 1700 தகவல்கள் கூட பரிமாற்றப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயற்கை தகவல் தொழில் நுட்பங்களை மேற்குலக நாடுகளும் மக்களின் சிந்தனைகளை மாற்றுவதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.