மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

கோவிட்-19 வைரசின் தாக்கம் இத்தாலியை நாசமாக்கி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று உள்ளூர் மயானங்களில் புதைக்கும் பணிகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) 627 பேர் பலியாகிய நிலையில், சனிக்கிழமை (21) 793 பேர் பலியாகியுள்ளனர். அங்கு சனிக்கிழமை வரை 4,825 பேர் மரணமடைந்துள்ளனர்.

சடலங்களை தாங்கியவாறு அணிவகுத்துச் செல்லும் இராணுவ வாகங்களின் காட்சி பெர்கோமா நகரத்தின் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்துலகத்தின் கவனத்தையும் ஈர்த்துக்ளது. இத்தாலியின் வடபகுதி நகரான லம்பாடியே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

இந்த நிலமை 6 மாதங்கள் தொடருமாக இருந்தால் நாம் மிகப்பெரும் மனிதப்புதைகுழியை தயார் செய்ய வேண்டிவரும் என இறுதிக் கிரிகைகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பணியாளர் கார்லோ றொசினி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக இத்தாலியே உள்ளது. அங்கு 4,825 பேர் பலியாகியுள்ளதுடன், 53,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை அங்கு 427 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிராந்திய ரீதியான தகவல்களே வெளியிடப்படுகின்றன. எனவே மாகாண ரீதியில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பெருமளவான மக்கள் அங்கு இறக்கின்றனர், ஆனால் அவர்களின் மரணம் கொரோனா வைரசின் மரணமாக கணிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் வீடுகளில் அல்லது வயாதனவர்கள் பராமரிக்கப்படும் இல்லங்களில் இறக்கின்றனர் என பெர்கோமா நகரத்தின் தலைவர் கோர்ஜியோ கொரி றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.italy66 மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

கடந்த 15 நாட்களில் தனது நகரத்தில் மட்டும் 164 பேர் இறந்துள்ளதாக அனால் 31 பேர் மட்டும் தான் கொரோனா வைரசினால் இறந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 56 பேர் இறந்துள்ளனர்.

25 பிரேதப் பெட்டிகள் புதைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஓவ்வொரு நாளும் இந்த உள்ளூர் மயானத்தில் 25 சடலங்களை தாம் புதைப்பதாக அதன் செயலாளர் குலியோ டெலவிற்றா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒரு நிலமையை தாம் முன்னர் எப்போதும் சந்தித்ததில்லை என றொசினி தெரிவித்துள்ளார். இந்த மாதம் முதல் அவர் 95 சடலங்களை புதைத்துள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் நாளில் இருந்து லம்பாடியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மரணவீட்டில் கலந்துகொள்வதும் ஆபத்தானது எனவே இறந்தவர்கள் உடனடியாக பெட்டிக்குள் இடப்பட்டு கிருமிகள் வெளியில் பரவாதவாறு மூடப்படுகின்றனர். பின்னர் பெட்டிகள் நேரிடையாக புதைக்கும் இடத்திற்கே அனுப்பப்படுகின்றன. என தொற்றுநோய் தொடர்பான ஆய்வாளர் அலசன்றோ கிரிமால்டி அல்ஜசீனரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

எனவே உறவினர்கள் உரிய பாதுகாப்பு உடைகளுடன் சிறிது நேரமே இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள் எனில் காலதாமதம் ஆகின்றது.

இத்தாலி ஒரு கத்தோலிக்க நாடு, ஆனால் மரணவீட்டில் மக்கள் கலந்து தமது மத நடைமுறைகளை பின்பற்றமுடியாத ஒரு நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் திடீரென காணாமல்போவது அங்குள்ள மக்களிடம் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.italy76 மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

உறவினர் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் ஏனையவர்கள் பார்க்க முடியாதவாறு அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார், அவருக்கு நோய் தீவிரமாகினால் அதன் பின்னர் அவரை நிரந்தரமாக பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு நிiனைத்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் தாயாருடன் வீட்டில் இருக்கிறீர்கள், தாயாருக்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றது. நோயாளர் காவுவண்டி வந்து அவரை ஏற்றிச் செல்கின்றது. அதன் பின்னர் நோய் தீவிரமடைந்தால், நீங்கள் அவரின் கல்லறையை தான் காண்பீர்கள். அவரின் சடலத்தைக்கூட பார்க்க முடியாது.

உயிர் பிரியும்போது அவர் என்ன நினைத்திருப்பார்? நான் அவருடன் என்ன பேச நினைத்திருப்பேன் என்பது எல்லாம் நிiனைவுகளாகவே இருக்கும்.

இறுதி அஞ்சலிகளைக் கூட கூட்டமாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டேலவிற்றாவின் சகோதரர் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயாளர்காவு வாகனம் அவரை ஏற்றிச் சென்றது. டேலவிற்றா 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார், அதேசமயம் அவரின் சகோதரர் இறந்துவிட்டார்.

நாங்கள் எல்லோரும் தனித்தனியாகவே அவருக்கு அஞ்சலிகளைச் செலுத்தினோம், ஒன்றாக கூடவே எங்களால் இயலவில்லை. இந்த நோயின் தாக்கம் தணிந்த பின்னரே டேலவிற்றாவின் சகோதரரின் கல்லறையில் முறையான அஞ்சலிகள் செலுத்தப்படும், அப்போது தான் அங்கு கண்ணீர்கள், நினைவுகள், வணக்கங்கள் எல்லாம் இடம்பெறும் அதுவரை அவர்கள் காத்திருக்கின்றனர்.

செய்தித் தொகுப்பு : ஆர்த்தீகன்

Leave a Reply