மத தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ், இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி யோகோ விடோடோவிடம் இருந்து புனித பாப்பரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது அவர்களிடையே கலந்துரையாடலும் இடம்பெற்றது. மத ஒற்றுமைக்கான தேவை உள்ளது என்றும், மத தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் புனித பாப்பரசர் இதன்போது தெரிவித்த்துள்ளார்.