மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்

136 Views

ஈரானின் இராணுவ ஜெனரல் குசேம் சுலைமனியினை அமெரிக்கா படுகொலை செய்த சில நாட்களில் ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னர் கருத்து தெரிவித்த ஈரானின் அரச தலைவர் கசான் றொகானி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படையினரை முற்றாக வெளியேற்றுவதே அமெரிக்கா மேற்கொண்ட படுகொலைக்கான இறுதியான பதில் என தெரிவித்திருந்தார்.

இந்த பிராந்தியம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள ஏவுகணைத் தாக்குதல்களின் முதலாவது முயற்சியே தற்போதைய தாக்குதல் என ஈரானின் இராணுவம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் ஏறத்தான 60,000 தொடக்கம் 70,000 அமெரிக்கப்படையினர் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படையினரை அங்கு நகர்த்தவுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

21ea7806cbbc4f868d23dd464d52d130 6 மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் எங்கு எங்கு அமெரிக்கத் தளம் உள்ளது என்பதை கீழ் வரும் வரைபடத்தில் நீங்கள் பார்க்கலாம்.

Leave a Reply