மட்டுநகரில் 4 பேருக்கு கொரோனா நோய் உறுதி

200 Views

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4 பேருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பி.சி.ஆர் எனப்படும் கொரோனா நோய் கண்டறியும் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு இதுவரை 143 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் இன்று (29) தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவின் இரண்டாவது மாடியில் கொரோனா தொற்றுநோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது தளத்தில் உள்ள சிறப்பு பிரிவின் ஊடாக சந்தேகத்துக்கு இடமானவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் அதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் கொழும்பு அல்லது வெலிசர வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply