Home செய்திகள் மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று  கரையொதிங்கியுள்ளது.

இன்னும் பல ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20210619 WA0013 மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

கடந்த 21 ஆம் திகதி எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.

இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26ஆம் திகதி ஆரம்பித்த கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளை கடற்படை ஏனைய பங்கேற்பாளர்களுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உஸ்வெட்டகெய்யாவ முதல் கெபுன்கொட வரை 9 கிலோமீற்றர் பாதிப்புக்குள்ளான கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள உஸ்வெட்டகெய்யாவ, எலெனேகொட, சரக்குவா மற்றும் கெபுன்கொட கடற்கரைப் பகுதிகள் கப்பல் குப்பைகளால் பெரிதும் மாசடைந்துள்ளன என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அந்தக் கடலோரப் பகுதிகளில் கடற்படை மேற்கொண்ட துப்புரவு முயற்சிகளிலிருந்து தீ விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய 1500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version