Home செய்திகள் மட்டக்களப்பில் கனமழை -வெள்ளநீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் கனமழை -வெள்ளநீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியூடாக வெள்ள நீர் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள சிறு போக விவசாய செய்கை கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

IMG 20210416 WA0086 2 மட்டக்களப்பில் கனமழை -வெள்ளநீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மண்டூர் நாதனை வேத்துச்சேனை, தும்பாலை, ஆனைகட்டியவெளி ,இராணமடு, சமுலையடிவட்டை,போரதீவு,பொறுகாமம்,பழுகாமம் போன்ற காலபோக விவசாயச் செய்கை வெள்ள நீர் பெருக்கெடுத்தமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இராணமடு ஆற்றின் அனைக்கட்டு உடைப்பெடுத்து விவசாய நிலத்தினுடாக வெள்ளநீர் பாய்வதன் காரணமாகவும் ஆனைகட்டியவெளி காக்காச்சிவட்டை பாலத்தினூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாகவும் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யுமானால் வேலாமைச் செய்யினை முற்றாக ககைவிடவேன்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version