மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் – திருமலையான்

9 2 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் - திருமலையான்திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை.இவ்விடயம் சம்மந்தமாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொலியில் முறைப்பாடு செய்ததாக தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (09) அப்பகுதியில் மக்கள்  கூடி நின்றனர் மக்கள் கருத்து தெரிவிக்கையில் …

8 2 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் - திருமலையான்நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித் தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழக்கியது யார் என்ற கேள்வியை எமுப்பினர்.

சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், நாளாந்தம். கூலித் தொழிலையும், நெற்செய்கை,  கால் நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள்தான் இப் பகுதியில் இருக்கின்றனர்.

குளம்,  வயல்,  காடு போன்ற வளங்களையே நம்பி வாழ்கின்றனர் மலையைச் சூழவுள்ள வயல்கள்,  மேய்ச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும் என்றார். இவ் மலையில் இந்து வழிபாட்டு அடையாளங்களும் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7 3 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் - திருமலையான்வளங்களை அழிக்கும் நிலைதான் மக்களையும் மீறி ஏற்படுகிறது வடகிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் தனியார் காணி அபகரிப்பு போன்றன வட கிழக்கில் மாத்திரம் ஏன் இடம் பெறுகின்றது. வெடி பொருட்களை கொண்டே மலையை தகர்த்தி அதில் உள்ள கற் பாறைகளை எடுக்க முயற்சிக்கின்றனர் சட்ட ரீதியான அனுமதி என்றாலும் அரச திணைக்களங்களின் ஒட்டு மொத்த அனுமதி உடனே எந்த விதமான செயற்பாடுகளையும் மேற் கொள்ள முடியும் இப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக விவசாய செய்கை குளங்களை நம்பி செய்கை பண்ணப்படுகிறது கால் நடைகள் வளர்ப்பு இடம் பெறுகின்றது இவ்வாறான நிலையில் இந்த மலைகளை உடைப்பதனால் பல சூழலியல் தாக்கங்கள் பல பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவிச்சரிதவியல் சுரங்கப்பணியகம், வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலகம், காணி திணைக்களம், விவசாய சம்மேளனம் உட்பட பல திணைக்களங்களின் அறிக்கைகள் சாதகமாக பெறப்பட்டதன் பின்புதான் அனுமதிகளை முறையாக பெறலாம் ஆனால் அரசியல் அதிகாரம் படைத்த கொந்தராத்துக்காரர்கள் மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காது இது போன்ற விடயங்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.

5 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் - திருமலையான்எது எவ்வாறாக இருந்த போதிலும் அப் பகுதிஅப்பாவி  மக்கள் சம்பூர் பொலிஸாரால் பத்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதன் போது 1979 ஆம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 81 கீழ் சமாதான குழவை ஏற்படுத்தக் கூடிய செயல் ஒன்றை செய்த அடிப்படையில் சம்பூர் பொலிசார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் புதன்கிழமை (12.06.2024) மதியம் 12.20 மணிக்கு ஆஜர் ஆகினர் நீதிமன்றமானது இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

10 பேருக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு. முகுந்தன்,  ந. மோகன் ஆகியோர் ஆஜர் ஆகியிருந்தனர்.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து  மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

“பல வருட காலமாக இங்கு குடியிருந்து வருகிறோம் இங்கு பயிர்ச் செய்கை மூலமே வாழ்வாதாரத்தை கொண்டு சீவிக்கிறோம் அதற்குள் இம் மலையை உடைத்தால் நாங்களும் அழிந்து விடுவோம் மலை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போதும் முறைப்பாட்டை ஏற்காமல் உரிய இடத்துக்கு வந்து அவர்களை வேலைகளை செய்ய விட்டு எங்களை கைது செய்தார்கள் எனவே வாழ்வாதாரத்தை அழித்து நாசமாக்கி மலையை உடைக்க வேண்டாம்” என அப் பகுதி குடும்பத் தலைவி ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

6 5 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் - திருமலையான்மக்கள் உரிமைகளை செவிமடுக்காது பொலிஸாரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்து அப்பாவி மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் உரிமைகளை மீறும் செயலாகும்  இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது அதிகாரத்தை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும் அதிகார துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது .அன்றாட ஜீவனோபாயத்தை கூட தங்களால் மேற்கொள்ள முடியாமல் இம் மக்கள் வருந்துகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள்,குழந்தைகளை வைத்து பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்க நினைக்கிறார்கள்.

“மாறி காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இந்த குளத்தை நம்பியே விவசாயத்தில் ஈடுபடுகிறோம் சுமார் 25க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கிறோம் ” என அப் பகுதி விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்க திணைக்களங்களின் துறைசார் உத்தியோகத்தர்களின் மூலமான அனுமதிகள் ஊடாக அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் மலை உடைப்புக்கு பயன்படுத்தும் வெடிபொருட்கள் மூலமாகவும் ஒலி மாசடைவு உட்பட பல பாதக விளைவுகள் ஏற்படக்கூடும் இதனால் அப் பகுதி மக்களே பாதிக்கப்படுவார்கள். மக்களுடைய விவசாய செய்கை கால் நடை வளர்ப்பு சுத்தமான நீரை பெற முடியாது குளங்கள் பாதிப்பு என பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

“காய்ந்த விறகுகளை கூட எடுக்க முடியாது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடுத்து நிறுத்துவர் ஆனால் இவர்களுக்கு மலையை உடைக்க அனுமதி கொடுப்பார்கள் பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம் அரசாங்கம் தான் மக்களை பாதுகாக்க வேண்டும் இதற்காக அரசாங்கம் உதவ வேண்டும் ” என குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஒரு சட்டம் மலையை உடைப்பவர்களுக்கு ஒரு சட்டமா சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற வார்த்தைக்கே அர்த்தமற்றதாகிவிடுகிறது.

“இந்த மலையால் 200வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது வணக்கஸ்தளங்களை சேர்த்து உடைக்க முற்படுகிறார்கள் வாழ்வாதாரத்தை நம்பி செயற்படும் எங்களை வன்முறையை தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்தார்கள்” பல்வேறு இக்கட்டான சூழ் நிலையில் வாழும் மக்களை அச்சுறுத்தி செயற்படுவதும் வாழ்வாதாரத்தை அழிப்பதும் மக்கள் மீது திணிக்கும் துஷ்பிரயோகமாக உள்ளது. அப்பாவி மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுப்பதும் அவர்களை பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை கொண்டு சேர்ப்பதும் அரசாங்கம் மீதுள்ள கடமையாகும்.

மூதூர் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கின்  பின் ஊடகங்களுக்கு மக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம் .அரசாங்கம் மக்களூக்காக தான் இருக்கிறது மக்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

எனவே மக்களுக்காக பல விடயங்களை சாதகமான நிலமைகளை உருவாக்க உரிய அரச உயரதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.