போலி முக நுால் கணக்குகளை நிறுத்த நடவடிக்கை – ரம்புக்வெல

இலங்கையில்  2 மில்லியன் போலி முக நுால் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் சுமார் 27 வீத முக நுால் கணக்குகள் போலியானவை.  நீதியமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து போலிச் செய்திகள், போலி சமூக ஊடக கணக்குகளை அகற்ற புதிய சட்டங்களை வகுப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து போலி சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்பதுடன் இது நாட்டில் போலிச் செய்திகள் வெளியாவதைக் குறைக்கும் முயற்சி”  என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.