போர் நிறுத்தமும் புதிய களமுனைகளின் மாற்றமும் -வேல்ஸில் இருந்து  அருஸ்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போரை வெற்றி தோல்வியின்றி முடித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் Trump இரு தரப்பும் அதாவது இஸ்ரேலும் ஈரானும் மிகவும் துணிந்தவர்கள் பலமானவர்கள் மிகவும் புத்திகூர்மையுள்ளவர்கள் எனவும் அவர் பாராட்டியுள்ளார். கடந்த 23 ஆம் நாள் கட்டாரில் உள்ள அமெரிக்காவின் Al Udeid Air Base என்ற மிக முக்கிய தளத்தை ஈரான் தாக்கிய இரண்டு மணிநேரத்தில் அமெரிக் அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த தகவல் போரிட்ட இரு தரப்புக்கும் பின்னர் தான் தெரியும்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலுக்கு பதிலடியாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் தளம் மீது ஈரான் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதல்களை தடுப்பதற்கு அமெரிக்காவின் வான் எதிர்ப்பு ஏவுகணைகளான பற்றியாட் ஏவுகணைகள் ஏவப்பட்டபோதும் பல ஏவுகணைகள் தளத்தினுள் வீழ்ந்து வெடித்துள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்திய சமயம் இந்த தளத்தினுள் அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய கட்டளை மையத்தின் அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளபோதும், சேதவிபரங்கள் தெரிய வில்லை. இந்த தாக்குதலுக்கு ஈரான் குறுந்தூர மற்றும் நீண்டதூர பலிஸ்ரிக் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க தளம் மீது ஈரானின் ஏவு கணைகள்  வீழ்ந்து வெடித்த சத்தங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையின் சத்தங்கள் கேட்டு சொப்பிங் மால்களில் நின்ற மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும் தாம் அமெரிக்காவின் தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும் இது ஒரு தற்பாதுகாப்பு நடைவடிக்கை எனவும் ஆனால் அமெரிக்கத் தளங்கள் மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் இந்த தாக்குதல் கட்டார் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது அல்ல எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த தாக்குதலை சவுதி அரேபியா உட்பட அமெரிக்க தளங்கள் உள்ள அரபு நாடுகள் கண்டித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு தளங்களை வழங்கும் அரபு நாடுகளுக்கு மிகப்பெரும் பாடமாக அமைந்துள்ளது. இது அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத் தலாகவும் அமைந்துள்ளது.
தாக்கப்பட்ட தளம் என்பது கட்டாரில் அமைந்துள்ள மிக முக்கிய தளமாகும், மேற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரும் அமெரிக்கத் தளமாகும். மத்தியகிழக்கு பிராந்தியத்தில் இது
வரை அமெரிக்கா மேற்கொண்ட படை நட வடிக்கைகளில் இந்த தளமே முக்கிய பங்கு வகித்திருந்தது. அமெரிக்காவின் வான் படை தலைமையகம் மற்றும் நடைவடிக்கைப்பிரிவின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன.
1990களில் அமைக்கப்பட்ட இந்த தளம் 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஈராக் போரில் இது தான் கட்டளை மையமாக இயங்கியது. ஈரானின் எல்லையில் இருந்து 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இந்த தளத்தில் உள்ள நீண்ட விமான ஓடுபாதை என்பது படைத்துறை கனரக விமானங்கள் இலகுவாக தரையிறங்கும் வசதிகள் கொண்டது. இந்த தளத்தில் 100இற்கு மேற்பட்ட அமெரிக்க வான்படை விமானங்கள் தரித்துநிற்பதுண்டு. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மீதான படைநடவடிக்கையின் தலைமையகமாக இந்த தளமே இயங்கியது.
இந்த தளம் F-16, F-15, B-52 and B-1 bombers, F-22 stealth fighters, RC-135 electronic surveillance aircraft, advanced attack and reconnaissance drones. C-130 and C-17 transport aircraft, American tanker aircraft ஆகிய விமானங்களின் பிரதான தளமாகும். அது மட்டுமல்லாது பற்றியாட் தாட் போன்ற அமெரிக்காவின் நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும் இந்த தளத்தில் உள்ளன.
கட்டாரின் வான்படையின் ஒரு பிரிவும் அதில் உண்டு. கடந்த ஆண்டு 10 பில்லியன் டொலர்கள் செலவில் கட்டார் அதனை நவீன மயப்படுத்தியிருந்தது. அதற்கு மாற்றீடாக அமெரிக் காவின் படைத்துறை பிரசன்னத்திற்கு மேலும் 10 வருட காலநீடிப்பையும் அது வழங்கியிருந்தது.
அதேசமயம், போர் நிறுத்த அறிவிப்பு வந்த பின்னரும் இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள Beersheba நகர் மீது 12 ஏவுகணைகளை 3 அலைகளாக ஏவியிருந்தது. அதில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 30 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணைகளை விட அதிக வெடிபொருட்களை சுமந்து செல்வதால் சேதங்கள் மிகவும் அதிகம். எனினும் இந்த தாக்குதலின் பின்னர் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த உடன்பட்டுள்ளன.
எனினும் இந்த போர் நிறுத்த உடன்பாட்டில் எந்த நிபந்தனைகளும் ஏற்படுத்தப் படவில்லை எனவும் உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை எனவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். இஸ்ரேல் போரை நிறுத்தினால் தாமும் நிறுத்துவோம் எனவும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் தாமும் தாக்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத் தனியாகூ தனது அமைச்சரவையை கூட்டிய பின்னர் தாமும் போரை நிறுத்த உடன்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஈரான் தாக்கினால் தாம் மீண்டும் தாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  நடை பெற்ற போரில் தாம் ஈரானின் அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பலத்தை அழித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை தெரிவிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னராகவும் ஈரானின் ஏவுகணைகள் இஸ் ரேலில் வீழந்து வெடித்து பெரும் நாசத்தை விளை வித்திருந்தது.
உண்மையை சொல்லப்போனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் ஈரானுக்கு எதிராக 12 நாட்கள் போரில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது தான் யதார்த்தம், இந்த போரில் பல ஏமாற்று நடைவடிக்கைகளும் நிகழ்ந்துள்ளன.  உதாரணமாக ரஸ்யாவை சேர்ந்த படைத்துறை நிபுணர் Boris Rozhin இந்த போரை இப்பிடி விபரிக்கின்றார். அதாவது அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலைகளை தாக்க முன்னர் ஈரான் அவற்றில் இருந்த முக்கிய பொருட்களை அகற்றிவிட்டது. பின்னர் ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளத்தை தாக்க முன்னர் அமெரிக்கா அதில் உள்ள படையினரையும், ஆயுதங்களையும் அகற்றிவிட்டது.
அதாவது இந்த இரு நடைவடிக்கைகளும் பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. இதற்கு முன்னர் அதாவது கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் போரை நிறுத்த விரும்புவதாக ஈரானுக்கு செய்தி அனுப்பியதாக இஸ்ரேலின் சனல்-12 செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதாவது ஈரானின் ஏவுகணைத் தாக்கு தல்களை தடுக்க முடியாது போனது, தினமும் 700 மில்லியன் டொலர்கள் செலவில் ஒவ்வொரு இரவையும் கழிப்பது என்பது இஸ்ரேலுக்கு போரின் வலியை உணர்த்தியிருந்தது. உக்ரைன் போர் இஸ்ரேல் பலஸ்தீனப் போர் இஸ்ரேல் ஈரான் போர் மற்றும் இஸ்ரேல் ஏமன் போர் என அகல கால்வைத்த அமெரிக்காவுக்கு சுமை அதிகமாகி விட்டது.
தொடர்ந்து வரும் ஈரானின் ஏவுகணைக ளும், ஆளில்லாத தாக்குதல் விமானங்களும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளின் கையிருப்பை விரைவாக குறைத்து வருகின்றது. 12 நாட்களுக்கே அதன் கையிருப்பு உள்ளது என முன்னர் நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்த நிலையில் கையிருப்பு முடி வதற்கு முன்னர் போர் நின்றுவிட்டது. ஏனெனில் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தீர்ந்த பின்னர் நிராயுதபாணியாக நிற்கும் இஸ்ரேலை ஈரான் தாக்குமாக இருந்தால் பேரழிவு நிட்சயம் என்பதை அமெரிக்காவும், இஸ்ரேலும் நன்கு உணர்ந்துள்ளன.
10 நாட்கள் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் போர், 12 நாட்கள் இடம்பெற்ற இஸ்ரேல் – ஈரான் போர் என்பன புதிய போர்க்களங்களில் ஏற்பட்டுவரும் மாற்றத்தினை நன்கு உணர்த்து கின்றன. அதாவது பல பலம்வாய்ந்த நாடுகள் கூட தமது போரியல் உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஒன்றினை அவை உணர்த்தி நிற்கின்றன. ஆனால் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக நோட்டோவின் கூட்டணி படையினரை எதிர்த்து ரஸ்யா நின்றுபிடிப்பது என்பது ரஸ்ய இராணுவத்தின் வலிமையும் உணர்த்தத் தவற வில்லை.