போர்க் குற்றவாளிகளை  தீவிரமாகப் பாதுகாக்கும் நாடாக இலங்கை – இறுதிப்பகுதி செல்வி ரேணுகா இன்பகுமார்

மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கட்டளையின் கீழ் செயற்பட்ட 53வது பிரிவு பொதுமக்களை படுகொலை செய்ததுடன், பலரை கடத்தி காணாமல்போகச் செய்திருந்தது. மேலும் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கியிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிரபாகரனை படுகொலை செய்ததிலும் அவரின் படையணி ஈடுபட்டிருந்ததை பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
புகைப்பட ஆதாரங்கள் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, பின்னர் பலமுறை சுடப்பட்ட
தாகத் தெரிவிக்கின்றன. இலங்கை அதிகாரிகள் பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்கிய போதி லும், வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த முக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் களை கைதுசெய்து கொலை செய்வதற்கும் குணரத்னவின் பிரிவு பொறுப்பானது. பெண்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, சித்திர வதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் அமைப்பு போன்ற அமைப்புக்களிடம் ஏராளமான ஆதாரங்கள் இருந்தபோதிலும், தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட குணரத்ன மீது இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை. அதற்கு பதிலாக, அரசாங்கத்தில் உயர் பதவிகளைப் அவர் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற பின்னர், 2019 இல் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் கீழ் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு மேற்கொள்ளும் இராணுவ மயமாக்கலை மேற் பார்வையிட இந்த பதவி அவருக்கு உதவியது. தமிழர் நினைவு நிகழ்வுகளை நசுக்கினார், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். இனப் படுகொலையை தொடர்வதற்கு அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்.
குறிப்பாக தமிழர்கள் மீதான படுகொ லையை நியாயப்படுத்தும் மற்றும் இராணுவவாத சிங்கள தேசியவாதத்தை ஊக்குவிக்கும் முகமாக 2016 ஆம் ஆண்டு அவரால் வெளியிடப்பட்ட நூலான நந்திக்கடல் சாலை என்ற நூல் தொடர்பில் சர்வதேச அளவில் பரவலான கண்டனங்கள் இருந்தபோதிலும், கமல் குணரத்ன இலங்கையின் பாதுகாப்பு எந்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகத் தொடர்கிறார். இனப்படு கொலையை அவர் தொடர்ந்து மறுத்து வருவதுடன், இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பாதுகாத்தும் வருகிறார், தமிழ் மக்களுக்கு நீதியை மறுக்கும் அதே வேளையில் போர்க் குற்றவாளிகளை தீவிரமாகப் பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை இருப்பதை உறுதிசெய்கிறார்.
இந்த இராணுவத் தலைவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள், விரிவான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கைகளில் அவர்க ளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை அதன் கோரத்தன்மை என்பன தெளிவாக காண் பிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக் கான நீதியை வழங்குவது இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு மிக முக்கியமானது.
சரணடைந்தவர்களை பலவந்தமாக காணாமல்போகச் செய்தது மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது தொடர்பில் இந்த அதி காரிகளில் சிலர் சர்வதேச விசாரணைகள் மற்றும் அனைத்துலக தடைகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
2920 நாட்களுக்கு மேல் (8 ஆண்டுகள்)இலங்கையில் பலவந்தமாக காணாமல் போன
வர்களின் நீடித்த சோகம் எண்ணற்ற குடும்பங் களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது, உலக மட் டத்தில் அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் போனவர்களை கொண்ட கொடூரமான பெருமையை இலங்கை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் 1999 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில், உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் போனோர் இலங்கையில் உள்ளனர் என்றும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் 12,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
1980 களின் பிற்பகுதியிலிருந்து இலங்கை யில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை 2017 இல் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசிடம் இருந்து இந்த துன்பமான சம்பவங்களுக்கான உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி 2,000 நாட்களுக்கும் மேலாக பலவந்தமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த இடைவிடாத ஆர்ப் பாட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆழமான வலியையும், நீதிக்கான உறுதியான தேட லையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை மேற்கொள்ளு மாறு சர்வதேச சமூகம் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்களை கண்டறி வதற்கும், அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்
பதற்குமான அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இந்த காணாமல் போன சம்பவங்களில் அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் இணைந்த துணை ராணுவக் குழுக்களின் ஈடுபாட்டை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த வரலாற்று அநீதிகளுக்கான நீதியை வழங்குவது, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் தான் இனநல்லிணக் கப்பாடுள்ள மற்றும் வளமாக எதிர்காலத்தை கட்டி யெழுப்ப முடியும்.
சர்வதேச சட்ட கட்டமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அழைப்புகள்சர்வதேச சட்டத்தின் கீழ் பலவந்தமான காணாமல் போதல்கள் கண்டிக்கத்தக்கவை. பலவந்தமாக காணாமல் போதல்கள் பரவலாக மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என அதனை பலவந்தமான காணாமல் போதலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு (ICPPED) வரையறுக்கிறது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவது ஒரு இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட தாக்குதலாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டம் வகைப் படுத்துகிறது. இத்தகைய செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் உள்நாட்டு சட்ட விதிகளையும் தாண்டி, சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்கள் என்பதை இந்த வரைமுறைகள் உறுதி செய்கின்றன.
இந்த காணாமல் போதல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் பலமுறை பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளது. காணாமல்போன பல்லாயிரக்கணக் கானவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை கண்டறியவும், அதற்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும் வேண்டிய தேவையை ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியது.
முடிவுரை2009 ஆம் ஆண்டு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோதும் அதற்கு முன்பும் தமிழ் ஈழத்தில் பலவந்தமாக காணாமல் போன சம்பவங்கள், சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலைக் குறிக்கின்றன, அது தொடர்பில் விரிவான விசாரணைகள் தேவை. படுகொலை செய்யப்பட்ட அந்த மண்ணின் மக்களின் புதைகுழிகள், இராணுவ ஆக்கிரமிப்புக்ககள் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட எண்ணற்ற மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு கிடைக்காததற்கான சான்றாக எமது நிலம் நிற்கின்றது.
பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் மற்றும் அவருடன் காணாமல் போனவர்களின் வழக்கு என்பது உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது. இந்த வரலாற்று அநீதிகளுக்கான நீதியை வழங்குவது, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவற் றின் அடிப்படையில் தான் இனநல்லிணக்கப்பாடுள்ள மற்றும் வளமாக எதிர்காலத்தை கட்டி யெழுப்ப முடியும்.
“எமக்கு மூன்று அடிப்படைகள் உள்ளன. அது என்னவெனில் தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமை. இவை தான் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள்.” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் என்ற கருத்தை நாம் அங்கு நினைவில் கொள்வது பொருத்தமானது.
தமிழ் ஈழம் நீடூழி வாழ்க.