Tamil News
Home செய்திகள் போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அதிகாரம்  மிஷேல் பாசிலெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது

போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அதிகாரம்  மிஷேல் பாசிலெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் சபையில் தலைவர் மிஷேல் பாசிலெட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு இலட்சம் பேர் வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் கருதுகிறது.

ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசு “பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக” இருப்பதாகவும் ஐ.நா  குற்றம்சாட்டி உள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானம் ‘எந்த வகையிலும் உதவிகரமானதாக இல்லை’ என்றும் ‘பிரிவினையைத் தூண்டும்’ வகையிலும் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறுகிறது.

இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஐநா மனித உரிமைகள் சபையில் தலைவர் மிஷேல் பாசிலெட், “இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிக்கப்படுவது மற்றும் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பேற்க வேண்டியதை வலியுறுத்துவது ஆகியவற்றைத் தொடர ஐநா மனித உரிமைகள்  சபையில் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன்.

உண்மை மற்றும் நீதிக்கான தங்கள் பயணத்தில் துணிச்சலுடனும் உறுதியாகவும் இருந்த இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்,” என்று  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு தற்போதைய கொள்கைகளிலிருந்து பாதை மாறி, சிறுபான்மையினர், மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version