Home செய்திகள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு கோரிக்கை

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு கோரிக்கை

மட்டக்களப்பில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள அகிம்சை வழி போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

IMG 0055 போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு கோரிக்கை

16வது தினமும் இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சர்வதேச நீதிபொறிமுறையை கோரியதான சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கான நீதியை சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து எந்த காலத்திலும் எதிர்பார்க்க முடியாது என்ற காரணத்தினாலேயே தாங்கள் சர்வதேச நீதியை கோரி போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியாகவும் அகிம்சை ரீதியாகவும் முன்னெடுக்கப் பட்டு வரும் போராட்டத்தினையே நசுக்க  முனையும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நீதியினை எந்த காலத்திலும் வழங்காது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

Exit mobile version