தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கு இணங்க குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது இடம் பெற்றுள்ளதுடன்
போதைவஸ்துக்கு எதிரான வீதியோர நாடகத்தினை கெல்விடாஸ் நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் இளைஞர் அபிவிருத்தி அகம் இனைந்து இச்செயற்பாட்டினை நேற்று (20) குளக்கோட்டன் வித்தியாலயம்,சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம்,முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் முன்னெடுத்துள்ளது.இதனை இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்தனர்.
இதில் அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வே.மோகன் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாயம்சார் அபிவிருத்தி உத்தியோகத்தர்,இளைஞர் சேவை அதிகாரி ,சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.