போதைப்பொருள் கடத்தல் -இந்தோனேசியாவில்   13 பேருக்கு மரண தண்டனை

258 Views

கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட் டில், ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13  பேருக்கு இந்தோனேசியா மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டு, மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர  நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

 இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply