Tamil News
Home உலகச் செய்திகள் பொறிஸ் ஜோன்சனின் வார்த்தைகள் வன்முறை வெடிக்கும் அளவில் உள்ளன

பொறிஸ் ஜோன்சனின் வார்த்தைகள் வன்முறை வெடிக்கும் அளவில் உள்ளன

ஆளும் கன்சவேட்டிவ் கட்சி பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தற்போது பிரெக்சிற் தொடர்பாகபயன்படுத்தி வரும் தீவிரமான வார்த்தைப் பிரயோங்கள் அரசியல் வன்முறைகளுக்குதூபமிடும் என எதிர்க்கட்சிகளும் ஆளும் கன்சவேட்டிவ் கட்சியின் பிரபலங்களும்எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில்கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்திய நிலையில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தை 5 வாரங்களுக்குஒத்திவைத்த முடிவு சட்டவிரோதமானதென பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தீர்ப்புவழங்கிய பின்னர் பொறிஸ் ஜோன்சனிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிரித்தானியாவின் மிதவாத அரசியல் வட்டாரங்களை அச்சப்படுத்தி வருகின்றது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பின்னர் நாடாளுமன்றம் மீண்டும்கூட்டப்பட்ட நிலயில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐரோப்பியஒன்றியத்திடம் சரணாகதியடைபவர்கள் என்ற தோரணையில் விளிக்கும் பிரித்தானியபிரதமர் இவ்வாறு செயற்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்.

துரோகம்செய்பவர்கள் என்ற கருத்துப்பட மறைமுகக் கருத்துக்களை ஆக்ரோசமாக வெளியிட்டுவருகின்றார்.இதனையடுத்தே பொறிஸ் ஜோன்சன் இவ்வாறு நா அடக்கமற்று கருத்துக்களைவெளியிடுவது பிரெக்சிற்றிற்கு ஆதரவான கடும் போக்காளர்களைஉத்வேகப்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

எதிர்க் கட்சியினரிடமிருந்து மட்டுமன்றி அம்பர் ரூட் போன்ற ஆளும்கன்சவேட்டிவ் கட்சியின் மூத்த அமைச்சர்களிடம் இருந்தும் இந்த எச்சரிக்கைவந்துள்ளன.

பொறிஸ் ஜோன்சனின் அமைச்சரவையிலிருந்து இந்தமாத ஆரம்பத்தில் விலகியமுன்னாள் அமைச்சர் அம்பர் ரூட் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

பிரதமர் மற்றும்அவரது நெருங்கிய அதிகாரிகளின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் அரசியல்வன்முறைகளுக்கு தூபமிடும் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதற்கிடையே ஒருவேளை பிரெக்சிற் இடம்பெறாமல் விட்டால் அமெரிக்காவின்லொஸ் ஏஞ்சல் நகரில் 1992இல் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒத்த வன்முறைகளில்பிரெக்சிற் ஆதரவாளர்கள் ஈடுபடக்கூடும் என சண் நாளிதழ் இன்று செய்திவெளியிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Exit mobile version