Home செய்திகள் பொன்.சிவகுமாரனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த எம்.கே.சிவாஜிலிங்கம்

பொன்.சிவகுமாரனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த எம்.கே.சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் யாழில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று(10) ஆரம்பித்தார்.

யாழ். உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்தார்.

இதேவேளை சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை திருகோணமலையில் நேற்று பிரகடனமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்.சிவகுமாரனின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிராஜ் நினைவுத் தூபிக்கு சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் சாவகச்சேரியில் தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

 

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version