தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணைய வாயிலாக தனியார் சனலுடனான உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்தார்.