பொதுபல சேனாவை தடைசெய்ய முடியாது – அமைச்சர்கள் குழு

பொதுபலசேனாவை தடைசெய்யவேண்டிய அவசியமில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான் ஹாசிமின் அமைப்பு உட்பட பல அமைப்புகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன,இந்த அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சரவை குழுவின் செயலாளர் ஹரிகுப்த ரோகணதீர தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுபலசேனா குற்றநடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு இல்லை என்பதால் அதனை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்படவி;ல்லை என அவர் தெரிவித்துள்ளார்.