பேர்லினை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் இயக்குநர் கவுதமன்

164 Views

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சிறீலங்காவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு, யேர்மன் நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இயக்குநர் கவுதமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது கோரிக்கையில்,

“எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சிறீலங்காவின் சுதந்திர நாள். தமிழீழத் தமிழருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழத்திற்கும் அது ஒரு கரிநாள். கறுப்பு நாள். ஈவு இரக்கமற்ற இனப்படுகொலையை செய்த சிங்கள அதிகார வர்க்கத்தையும், அந்த காட்டேறி கூட்டங்களையும் வருகின்ற மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தொடரில்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை நேர்நிறுத்த யேர்மன் நாட்டில் பேர்லின் நகரில் யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் முன்பாக நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் திரள் ஒன்றுகூடலில் யேர்மன் நாட்டிலுள்ள தமிழீழ உறவுகள் மட்டுமல்ல, வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படுமாயின், அதில் கலந்து கொண்டு யேர்மன் அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி கொடுத்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் யேர்மன் நாடு இலங்கை அதிகார வர்க்கத்தை நேர்நிறுத்துகின்ற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply