“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறும்போது நாடாளுமன்றக் குழுவின் தலைவர் (கொறடா) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகிய பதவிகளுக்குரிய நியமனங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். எனினும், தற்போது வரையில் இந்தப் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை” என கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கின்றது.