Tamil News
Home உலகச் செய்திகள் பெரும் இலாபம் ஈட்டும் சீன எரிபொருள் நிறுவனங்கள்

பெரும் இலாபம் ஈட்டும் சீன எரிபொருள் நிறுவனங்கள்

கோவிட் முடக்கம் மற்றும் வீட்டு விலை வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளினால் சீனாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும், எரிபொருட்களின் விலையேற்றத்தல் சீனாவின் எரிபொருள் நிறுவனங்கள் மிகப்பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.

பெற்றோ சீனா நிறுவனம் மற்றும் சிநூக் லிமிற்றட் போன்ற நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன் வரையிலான அரை ஆண்டு பகுதியில் எரிபொருட்களில் விலையேற்றத்தால் அதிக இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளன.

சீனாவின் எரிபொருள் விற்பனை 11 விகிதத்தால் அதிகரித்துள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகின்றது. பூகோள அரசியல் நெருக்கடி தற்போதும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எண்ணையின் விலை ஒரு பரல் 105 டொலர்களாக உள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 60 விகிதம் அதிமாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version