பெண் வைத்தியருக்கு நீதி கோரி வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

WhatsApp Image 2025 03 12 at 1.38.39 PM 1 பெண் வைத்தியருக்கு நீதி கோரி வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று புதன்கிழமை (12) பகல் வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் இளம்பெண் வைத்தியரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தினை கண்டித்தும் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பினை  உறுதிப்படுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே நேரம் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்திய வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்திருந்தனர்.

“பெண் வைத்திய உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்”, “சகல பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் உரிமையை பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் ’குறிப்பிடப்பட்டிருந்த பாதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.