பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் – கவனயீர்ப்பு போராட்டம்

IMG 20240710 WA0032 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் - கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (10)இடம் பெற்றது இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

IMG 20240710 WA0026 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் - கவனயீர்ப்பு போராட்டம்அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்டார் இதனை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் பலர் இதன் போது ஈடுபட்டனர்.