புளுட்டோ ஒரு கிரகமே –நாசா விஞ்ஞானி

254 Views

புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல் ரோபோட்டிக் நிகழ்வில் அவர் பேசிய போது இதைக் குறிப்பிட்டார்.

”எனது கருத்தின்படி பு@ட்டோ என்பது ஒரு கோள்.   நான் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஏனெனில், எனது ஆய்விற்குட்பட்டு நான் கண்டறிந்த விடயம் இது” என்று கூறினார்.

கடந்த 1930ஆம் ஆண்டு புளுட்டோ கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிந்தவர் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர் கிளைட் டோம்பக். அந்த நேரத்தில், சூரியக் குடும்பத்தில் 9ஆவது கிரகமாக புளுட்டோ கருதப்பட்டது.

சூரியக் குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் குய்ப்பர் வளையத்தில் புளுட்டோ அமைந்திருந்தது. ஆனால், அதே போன்று தோற்றமுடைய வேறு அம்சங்களும் அப்பகுதியில் கண்டறியப்பட்டதால், புளுட்டோ ஒரு கோள் அல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது நாசா தலைவர் அது ஒரு கோள் தான் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply