நாட்டை சீர்குலைத்து ஆட்சியை கைப்பற்றுவதற்காக இலங்கையின் தலைநகரில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற புனித ஞாயிறு குண்டுத்தாக்குதலை ராஜபக்சாக்களே நடத்தினர் என பிரித்தானியா ஊடகமன த ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குண்டு தாக்குதல்களில் 8 பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் உட்பட 250 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை புலனாய்வுத்துறையின் உயர் அதிகாரியின் ஒப்புதல் வாக்குமுலத்துடன் கூடிய ஆதாரங்களை நாளை பிரித்தானியாவின் சனல் போர் ஊடகம் ஒளிபரப்பவுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பான திட்டமிடல் கூட்டம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு உறுப்பினர்களுக்கும், இலங்கை புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி சுரேஸ் சார்லி உட்பட பல அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.