புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது – ஊழியர் பலருக்கு கொரோனா

170 Views

இந்திய தலைநகர் புது டில்லியில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ் தானிகராலயம் மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே குறித்த உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அலுவலகத்தில் பணியாற்றிவந்த பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் +91-11-23010201 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், slhc.newdelhi@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் தொடர்புகொள்ளுமாறு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply