Tamil News
Home உலகச் செய்திகள் பீகார் தேர்தல்: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை எதிரொலிக்குமா?

பீகார் தேர்தல்: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை எதிரொலிக்குமா?

கொரோனா பெருந்தொற்று சூழலினால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பெருந்தொற்று சூழல் தொடங்கிய நேரத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு திரும்பியதாகக் கருதப்படும் நிலையில், இத்தொழிலாளர்களின் பிரச்னையும் வாக்கும் இத்தேர்தலில் முக்கிய பங்கை வகிக்கும் எனக் கூறப்படுகின்றது.
பெருந்தொற்று சூழல் எப்படி சந்தைகளை, போக்குவரத்தை பாதித்ததோ அது போல தேர்தலையும் பாதிக்கும் என இந்து நாளிதழிடம் கூறியுள்ளார் பீகாரைச் சேர்ந்த  தொழிலாளி ஒருவர்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில்,தமது ஊர்களுக்கு கால் நடையாக திரும்பிச்சென்றனர். இதன் போது பலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
Exit mobile version