பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களிடம் அரசியல் கைதியாக சிக்கியுள்ளோம் – சாணக்கியன்

181 Views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அரசியல் கைதியாக வைக்கப்பட்டள்ளதாகவும் அவரை அதிலிருந்து விடுவிக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் “மாவட்ட அரசாங்க அதிபர் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களிடம் அரசியல் கைதியாக சிக்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

பிள்ளையான் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது பாசிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள விடுதிகளில் கூட ஓரு தமிழருக்கும் நியமனத்தினை வழங்கமுடியாதவர்கள் துறைமுக நகரில் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று கூறுகின்றார்கள்.இதனை எவ்வாறு நம்புவது” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

Leave a Reply