பிரித்தானியா பயணமானார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (4) அதிகாலை 3.15 மணியளவில் பிரித்தானியாவிற்கு பயணமானார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் பிரித்தானியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.