பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி- இலங்கை அரசாங்கம் கண்டனம்

இங்கிலாந்தின் ஓவல்மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழத் தேசியக்   கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதன் போது தமிழீழத் தேசியக்   கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விடயத்தை பிரிட்டனின் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் ரோகிதபோகொல்லாஹம தெரிவித்துள்ளார்.