பிரான்ஸ், ஸ்பெயினிலும் புதிய கொரோனோ வைரஸ்

385 Views

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் நாள் பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் இற்கு வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த புதிய கொரோனோ வரைஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து 40 இற்கு மேற்பட்ட நாடுகள் பிரித்தானியாவுக்கான பயணத்தடையை விதித்திருந்தன.

அதேசமயம், யப்பான், டெனமார்க், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த புதிய கொரோனோ வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. நோயாளிகளில் பலர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply