பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா!

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், பிரான்சிடம் இருந்து  இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில்  26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது.

இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.