பிரபல ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

இலங்கை வானொலி தந்த பிரபர ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்.

கலையகத்தின் தொடர்நிலை அறிவிப்பு முதல் பல வானொலி நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி பல்லாயிரக்கணக்கான நேயர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒலிபரப்பாளர் நடராஜ சிவம் நேற்றிரவு தன்னை நேசித்தவர்கள் நெஞ்சங்களில் மாத்திரம் நிரந்தரமாக இடம்பிடித்தவாறு இவ்வுலகிலிருந்து விடைபெற்றுள்ளார்.

வானொலித்துறையில் வலிமைமிக்க ஆளுமையாளர்களில் நடராஜசிவமும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் ஒலிபரப்பு இலக்கண விதிகளைக் கடைப்பிடித்து வந்த மூத்த ஒலிபரப்பாளர். இலங்கை வானொலி தமிழ்ச்சேவை நிகழ்ச்சிகளை அன்றைய காலகட்டத்தில் கேட்டு மகிந்தவர்கள் நடராஜசிவம் அவர்களின் இனிமைக்குரலை மனதிருத்தி வைத்திருப்பார்கள்.