பாலியல் குற்றச்சாட்டு – வத்திக்கான் மீது நான்கு பேர் வழக்கு

43
52 Views

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கார்டினல் தியோடார் மெக்கேரிக்கை, நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் பல பதவிகளில் பணியாற்ற அனுமதித்ததை எதிர்த்து, வத்திக்கான்(Vatican) மீது நான்கு பேர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

நியூ ஜெர்சி உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாடிகன் மீதான இந்த வழக்கை, திருச்சபையைச் சேர்ந்த மூன்று பேரும், பாதிரியார் ஒருவரும் கொடுத்துள்ளனர்.

மேலும் பாதிரியார்கள் இல்லத்தில் சாதாரண மனிதராக வாழ்ந்து வரும் 90 வயதான மெக்கேரிக் மீது எழுந்த பல பாலியல் குற்றச்சாட்டுகளை வாடிகன் மறைத்துள்ளதாக வாடிகனில் முன்னதாக வெளிவந்துள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு “பாலியல் ரீதியான குற்றஞ்சாட்டுக்கு ஆளாகியுள்ள 3000-க்கும் மேற்பட்ட மதகுருக்களின் பெயர்களையும் ஆதாரங்களையும் வத்திக்கான் வெளியிட வேண்டும்” என வழக்குத் தாக்கள் செய்தவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.

போப் இரண்டாம் ஜான் பால், பெனடிக்ட், ஃப்ரான்சிஸ் என அனைவரும் பாலியல் குற்றங்களை திட்டமிட்டு மறைத்துள்ளதாக வழக்குத் தொடுத்திருக்கும் நபர்களின் வழக்கறிஞர் ஜெஃப் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த வழக்கு வத்திக்கான் நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் திருப்பீடம் (ஹோலி சீ), அதன் ஊழியரான மெக்கேரிக் மீது  முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தாலும் அவரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அவர் மீது சுமத்தப்பட்டு வந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை மறைத்து வந்துள்ளது என ஆண்டர்சன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here