பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே பார்வையால் இன்பம் காணலாகும்.

ஒருவன் பிறரது நிர்வாண உடலையும் பிறப்புறுப்புக்களையும், பிறரது பாலியல் நடத்தைகளையும் பார்ப்பதன் மூலம் பாலியல் ரீதியான இன்பத்தையும் மன நிறைவையும் பெற்றுக்கொள்ளுகின்றமை ஒரு பாலியல் கோளாறு ஆகும். ஆங்கிலத்தில் இது Voyeurism எனப்படும்.

இதில் Voyeur எப்பொழுதும் ஏனையவரது பார்வையிலிருந்து மறைந்தே இருப்பார். வொயரிசம் ஒரு வகையான அதீத பாலுணர்வு. வொயரிசத்தின் மாறுபட்ட வடிவமானது சிற்றின்ப உரையாடல்களை கேட்டல் மற்றும்ää தொலைபேசி மூலமான பாலியல் உறவையும் குறிக்கின்றது.

பார்வையால் இன்பம் காணலில் உடைகளை மாற்றும் போது, பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மற்றும் நிர்வாணமாக உள்ள நபர்களை பார்த்து சுயஇன்பம் அடைவதைக் குறிக்கும். பார்க்கின்ற,எட்டிப் பார்க்கின்ற செயற்பாடானது பாலியல் ரீதியான புத்துணர்ச்சியை பெறும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படும். பொதுவாக பார்ப்பவர் பார்க்கப்படும் நபருடன் பாலியல் ரீதியான தொடர்புகளையோ செயற்பாடுகளையோ வைத்திருக்க முனைவதில்லை.

பல அரசுகள் பார்வையால் இன்பம் காணலை ஒரு குற்றமாக கூறும் விதிகளை கொண்டிருக்கின்றன. பெரும்பாலான அரசுகள் ஒரு நபர் அவரது வீட்டில் தனிமையில் இருக்கும் போதும்,வேறு சில தனியார் இடங்களில் இருக்கும் போதும், அவரது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்தையோ வீடியோ எடுப்பதையோ தடுக்கிறது.

Langstram மற்றும் seto என்போரின் ஆய்வில் 18-60 வயது உடையவர்களில் 2450 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். 12% ஆண்களும், 41% பெண்களும் குறைந்தது ஒரு தடவையாவது அடுத்தவர் உடல் உறவு கொள்வதை பார்த்து இன்பமடைந்ததாக கூறி உள்ளனர். அமெரிக்காவிலுள்ள கிராமத்திலுள்ள கல்லூரியை சேர்ந்த 60 ஆண் மாணவர்களில் மேற்கொண்ட ஆய்வில் 42மூ மாணவர்கள் அடுத்தவரது பாலியல் உறவினை இரகசியமாக பார்ப்பதாகக் கூறினர்.

பார்வையால் இன்பம் காணலுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான காரணமும் இல்லை. அனேகமான நிபுணர்கள் எதிர்பாராமல் ஒரு நபர் ஆடைகளை களையும் போது- பாலியல் நடத்தைகளில் ஈடுபடும் போது- நிர்வாணமாக உள்ளதை தற்செயலாக காணும் போது அந்த நடத்தையை கற்றுக் கொள்கிறார். மீண்டும் மீண்டும் அந்த செயலை வெற்றிகரமாக செய்யும் போது பார்வையால் இன்பம் காணபதற்கு உறுதியாக தள்ளப்படுகிறார்.

இக் கோளாறு ஏற்படுவதற்கான ஏதுவான காரணிகள் எவை என்று இதுவரை சரியாக அறியப்படவில்லை ஆயினும் இந்தக் கோளாறுகள் ஏற்படுவதற்கு சில காரணிகள்; கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாக பரம்பரை மூலம் கடத்தப்படும் நிறமூர்த்தங்கள் மூலம் இந்த கோளாறு கடத்தப்படுகின்றதாக கூறப்படுகின்றது அந்த வகையில் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் நிறமூர்த்தத் திரிபுகள் என்பவை காரணமாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. குழந்தைப் பருவத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களும் ஒரு காரணியாகக் கொள்ளப் படுகின்றது. குழந்தைப் பருவத்தில் ஒரு பிள்ளை தனது நடத்தையை குடும்ப மற்றும் சமூகத்தில் இருந்து அவதானிப்பின் மூலம் கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு கற்றுக் கொள்ளுகின்ற சந்தர்பத்தில் அப்பிள்ளை நேரான பண்புகளையும் கற்றுக் கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் எதிரான சில பண்புகளையும் கற்றுக் கொள்கின்றது. எதிரான பண்பாக பார்வையால் இன்பம் அடைவதை கற்க ஆரம்பிக்கின்றது.

ஒரு நபர் சிறுவயதிலோ அல்லது கட்டிளமைப் பருவத்திலோ பாலியல் சார் துஸ்பிரயோக்த்திற்குள்ளான சந்தர்ப்பங்கள் காணப்ப்படுமாயினும் அப்பிள்ளை பாலியல் சார் விலகல் நடத்தைகளை மேற்கொள்ளத் திட்டமிடும். அதாவது பாலியல் சார் துஸ்பிரயோகம் காரணமாக அப் பிள்ளை பாலியலில் அதிக ஆர்வம் கொண்டவராகவோ அல்லது மாறாக பாலியல் சார் ஆர்வமின்மை கொண்டவராகவோ மாறுகின்றார். இவ்வாறு பாலியல் சார் ஆர்வமின்மை காணப்படுமாயின் குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்தவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தினை அடைகின்ற தன்மை ஏற்படுகின்றது.

மேலும் ஒரு நபர் தன்னைப் பற்றி தாழ்வான சுய மதிப்பீட்டினை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் தான் அழகில்லாதவர் என்றும், தன்னால் எந்தப் பெண்ணையும் பாலியல் ரீதியாக சந்தோசபடுத்த முடியாது என்றும்ää தன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள், தான் பாலியல் செயற்பாட்டுக்கு பொருத்தமில்லாதவன் என்ற தாழ்வான சுயமதிப்பீடுகளும் ஒரு நபரை பாலியல் நெறிபிறழ்வுக்கு இட்டுச் செல்கின்றன.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் தனது பாலியல் சார் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உயிரற்ற பொருட்களை மணத்தல், தொடுதல் என்பவற்றின் மூலம் சுய இன்பத்தினை அனுபவிக்கின்றார்கள்.

ஒருவருக்கு பாலியல் நடத்தையை மேற்கொள்வதில் உடலியல் சார் குறைபாடுகள் காணப்படுமாயின் அந்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக மாற்று வழியில் இன்பத்தை பெற எத்தனிக்கின்றார். ஆண்குறி விறைப்பின்மை, பாலியல் உறவின் போதான வலி போன்ற குறைபாடுகள் காணப்படும் போது குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினை அனுபவிக்கும் பொருட்டு ஏனையோர் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தை அனுபவித்து தனக்கு ஏற்படும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றார் .

பாலியல் சார் இன்பத்தினை அனுபவிக்கின்ற போது ஏற்படுகின்ற உளவியல் சார் தடைகளும் முக்கியமான காரணியாக உள்ளன. பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் அதிக வெட்க உணர்வு, தாழ்வு மனப்பான்மை,ஆர்வமின்மை, பயம் போன்ற உளவியல் ரீதியான வெளிப்பாடுகள் காணப்படுமாயின் குறித்த நபரால் பாலியல் இன்பத்தினை அனுபவிப்பதற்கு வேறு வழிமுறை நாட்ப்படுகின்றது. மேலும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு பாலியல் சார் அடிப்படை அறிவின்மை என்பதும் ஒரு காரணியாக உள்ளது. அதாவது பாலியல் சார் அறிவின்மை என்பது நமது சமுதாயத்தில் இன்று அதிகரித்து வரும் ஒன்றாகும்.

பார்வையால் இன்பம் காணும் பாலியல் நெறிபிறழ்வை கொண்டிருப்பவரை அடையாளம் காண்பதற்கு அவர்கள் பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டுவர். எதிர்பாராத ஒரு நபர் ஆடை மாற்றும் போது அல்லது பாலியல் நடத்தையில் ஈடுபடும் போது பார்த்தல்- மீண்டும் மீண்டும் தீவிரமான பாலியல் உணர்வுகளை தூண்டுவதனான கற்பனைகள; பாலியல் தூண்டல்களில் ஈடுபடல்- நீலப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டல்- ஒரு நபரின் மறைவான பகுதிகளை உற்றுப் பார்த்தல் என்பன இனங்காணக்கூடிய அறிகுறிகள். பார்வையால் இன்பம் காண்பது ஒரு முறை மேற்கொள்ளப்படின் பொதுவாக இதைத் தடுக்க முடியாது. காலப்போக்கில் பாலியல் ரீதியான மனநிறைவை பெற்றுக்கொள்வதற்கான பிரதானமான வடிவமாக இது மாறும், இதுவொரு நீண்ட கால நோய்.

பாலியல் நெறிபிறல்வான,பார்வையால் இன்பம் காணும் நடத்தையை உள மருத்துவர்களும், உள ஆற்றுப்படுத்துநர்களும் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளை கையாளுகின்றனர். நடத்தை மாற்றுச் சிகிச்சை,உளக் கல்வியூட்டல், தளர்வுப் பயிற்சிகள், குடும்ப ஆற்றுப்படுத்தல்,அறிகைச் சிகிச்சை,ஆழ்துயில் சிகிச்சை, ஆள்மைய சிகிச்சை என்பவற்றின் மூலம் இச் செயல்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன.