பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்

419 Views
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு 2 நாட்களுக்கு முன்னதாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது இரத்தத்தில் உள்ள சிவப்பணு வீதம் குறைந்து படிப்படியாக இதயத்திற்கு வரும் இரத்த அளவு குறைவதே இந்த நோயின் தன்மையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறையில் தனது தந்தைக்கு விசம் கொடுக்கப்பட்டதால்தான் அவரது உடல் நிலை பாதிக்கப்படடதாக நவாஸ் ஷெரீப்பின் மகன் குற்றம் சாட்டியிருந்தார். இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு இரவு அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் லாகூரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிருக்குப் போராடி வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் அவரது குடும்ப மருத்துவர் அட்னான் கான் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply